போனி கபூரின் மகன் 46 வயது நடிகையை திருமணம் செய்ய உள்ள சம்பவம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் போனி கபூர்.
நேர்கொண்ட பார்வை திரைப்படம் மூலமாக தமிழுக்கு வந்த இவர் தற்போது அஜித்தின் வலிமை படத்தை தயாரித்து வருகிறார்.
போனி கபூரின் முதல் மனைவிக்கு அர்ஜுன் கபூர் என்ற மகனும் இரண்டு மனைவியான ஸ்ரீ தேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்களும் உள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
தற்போது 34 வயதாகும் அர்ஜுன் கபூர் தன்னை விட அதிக வயதாகும் ( 46 வயது ) பாலிவுட் நடிகை மலாய்கா அரோராவை காதலித்து வருகிறார். விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருக்கிறதாம்.
ஏற்கனவே இந்த நடிகைக்கு திருமணமாகி 16 வயதில் மகனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.