சில தினங்களுக்கு முன்னர் யுவன் சங்கர் ராஜா சிம்புவின் புகைப்படத்தை வெளியிட்டு நல்ல விஷயம் வருது எனக் கூறி இந்த நிலையில் தற்போது அது எது என தெரியவந்துள்ளது.

Yuvan Simbu Joins Again : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வருகிறார்.

ஆட்டுக்கறி போடாததால், ஆத்திரத்தில் வேறு பெண்ணை மணந்த மணமகன்..

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா சிம்புவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நல்ல விஷயம் வந்து கொண்டிருக்கிறது என கூறினார்.

Director Shankar’s Daughter Aishwarya Wedding Reception | Rohit|MK Stalin | Udhayanidhi | LatestNews

இந்த விஷயம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. காளிதாஸ் மற்றும் மேகா ஆகாஷ் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ள ஒரு பாடலை தான் சிம்பு பாட உள்ளார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். சாண்டி மாஸ்டர் தான் இந்த பாடலுக்கு நடனம் அமைக்கிறார்.