அஜித் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய யுவன் சங்கர் ராஜா, என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

அஜித் குறித்து யுவன் சங்கர் ராஜா பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களின் ஒருவராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இவர் இசைக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அஜித் குறித்து சுவாரசிய தகவலை கூறியுள்ளார். அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்திற்கு நான்தான் இசையமைக்க வேண்டும் என்று அஜித் சொன்னார் இந்த படத்தின் மூலம் உங்களது முழு திறமையையும் வெளிப்படுத்துங்கள் என்று என்னை உற்சாகப்படுத்தி பேசினார்.

அதேபோல் அந்த படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது எனக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்த படமாக தீனா இருந்தது இதற்கு முக்கியமான காரணம் அஜித்தான் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

