மலையாள திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் பாலா பாஸ்கர். இளம் வயதேயான இவர் கடந்த வாரம் தன்னுடைய 2 வயது மகள் மற்றும் மனைவியுடன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய போது கோர விபத்தில் சிக்கினர்.

விபத்து நடந்த இடத்திலேயே 2 வயது மகளை பறி கொடுத்தனர். இசையமைப்பாளர் பாலாவும் அவரது மனைவியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் தற்போது பாலா பாஸ்கரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணம் திரையுலகில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பாலா பாஸ்கரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.