Yogan

Yogan Movie : தளபதி விஜயின் யோகன் படம் ட்ராப்பாக என்ன காரணம் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த திரைப்படம் யோகன்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. ஆனால் படம் தொடங்காமலேயே ட்ராப்பாகி விட்டது.

இதற்கான காரணம் கெளதம் மேனன் தான் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. பொதுவாக தளபதி விஜய் ஒரு படத்தின் முழு கதையையும் கேட்டு விட்டு அதில் திருப்தி ஏற்பட்டால் தான் நடிக்க ஒப்பு கொள்வார்.

கெளதம் மேனன் ஆரம்பத்தில் இப்படத்தின் கதையை கூறும் போது 75%கதையையும் ஒன் லைன் ஸ்டோரியையும் தான் கூறியுள்ளார்.

சரி மீதி கதையையும் முடித்து விட்டு சொல்லுங்க படம் பண்ணலாம் என விஜய் கூறியுள்ளார். ஆனால் கெளதம் மேனன் அதன் பின்னர் இந்த கதையை கூறவே இல்லையாம்.

இதனால் இப்படம் பர்ஸ்ட் லுக் போஸ்டருடனே ட்ராப்பாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.