ரஜினியின் ‘தலைவர்-173’ படத்தின் அடுத்த இயக்குநர்..

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட ஒருவாரத்திலேயே சுந்தர்.சி இப்படத்திலிருந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில், அடுத்ததாக ‘தலைவர் 173’ படத்தை இயக்கும் வாய்ப்பு யாருக்கு? என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
ரஜினி ரசிகர்களை கவர்ந்த ‘பேட்ட’ திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தலைவரை வைத்து படம் இயக்க, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் முயற்சித்து வருகிறார். ஆனால், ரஜினிகாந்த் கலகலப்பான ஒரு கமர்ஷியல் படத்தில் நடிக்கவே தற்போது விரும்பியிருக்கிறார்.
கார்த்திக் சுப்பராஜ் படங்களில் காமெடி இருந்தாலும், அவரின் படங்கள் வித்யாசமான ஜானர்களில் இருக்கும். எனவே, ரஜினி கேட்பதைப் போல கலகலப்பான கமர்ஷியல் படத்தை வெங்கட் பிரபுவால் கொடுக்க முடியும் எனவும் கணிக்கப்படுகிறது.
ஏற்கனவே ரஜினயை வெங்கட் பிரபு சந்தித்து கதை பற்றிப் பேசியிருக்கிறார். எனவே, வெங்கட் பிரபு ‘தலைவர் 173’ படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாக சிலர் சொல்கின்றனர். ரஜினிகாந்த் -வெங்கட் பிரபு என்ற வித்யாசமான காம்போ இணைந்தால் கண்டிப்பாக அப்படம் ஜாலியான அதே சமயத்தில் வித்யாசமான படமாக இருக்கும் என்றே கணிக்கப்படுகின்றது. இப்படம் ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு முடிந்தவுடன், குறுகிய காலகட்டத்திற்குள் எடுக்கப்படும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இருப்பினும் ‘தலைவர் 173’ பற்றிய குழப்பங்கள் நீடித்துக்கொண்டே வருகின்றது. விரைவில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு இயக்குநரை கமலும் ரஜினியும் தேர்தெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுந்தர்.சி தற்போது நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன்-2 திரைப்படத்தை இயக்கி வருகின்றார். அதனைத்தொடர்ந்து, விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

