விஜய்-அஜித் இருவருக்கும் உள்ள வித்தியாசம்: இயக்குநர் பேரரசு ஓபன் டாக்..
‘மங்காத்தா’ படத்தின் மேக்கிங் வீடியோவை பார்த்தால் அஜித் மிக ஜாலியான மனிதர் என்பது தெரிய வரும். ஆனால் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர். தற்போது இருவரும் சீரியஸான மனிதர்களாக மாறிவிட்டனர்.
அஜித், தற்போது கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு வருகின்றார். அதனை முடித்துக்கொண்டு அடுத்ததாக ஆதிக் இயக்கத்தில் தயாராகவுள்ள ‘ஏகே64’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதம் துவங்கவிருக்கின்றது.
மறுபக்கம், அரசியலில் களமிறங்கி இருக்கும் விஜய், தன் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகிறது. இப்படத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளார்.
இந்நிலையில், விஜய்க்கும் அஜித்திற்கும் இருக்கும் வித்தியாசம் பற்றி இயக்குநர் பேரரசு பேசியிருக்கிறார். அவர் தெரிவிக்கையில்,
‘விஜய் ரொம்ப சைலண்டா இருப்பாருனு எல்லாருக்கும் தெரியும். ஆனால், அஜித் செம ஜாலி டைப். அனைவரிடமும் ஜாலியா விளையாடிட்டு பேசிட்டு இருப்பாரு. எதிலும் தலையிடமாட்டாரு, இயக்குனரை நம்பி விட்டுடுவாரு. ஆனால் விஜய், பாடல்கள் விஷயத்தில் ரொம்ப கவனமா இருப்பாரு. அவரிடம் டியூன் போட்டு காட்டிட்டு தான் ஓகே பண்ணனும். மற்றபடி இருவருக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை’ என கூறியுள்ளார்.
விஜய் நடிப்பில் திருப்பாச்சி, சிவகாசி அஜித் நடிப்பில் திருப்பதி ஆகிய படங்களை இயக்கியவர் பேரரசு என்பது நினைவுகூரத்தக்கது.

