ஆதிக் இயக்கவுள்ள அஜித் படத்தில் சூரி.?

Web Ads

பரோட்டா காமெடியில் பிரபலமாகி, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்தில் கவனம் கவனம் ஈர்த்தார் சூரி. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் ஹீரோவானார். ‘மாமன்’ படத்திற்கு கதையும் எழுதினார். தற்போது ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சூரி, அஜித்குமாருடன் நேரில் சந்தித்த புகைப்படத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

‘அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது. உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல; அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது. அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது’ என தெரிவித்துள்ளார்.

கடைசியாக சூரி நடிப்பில் ‘மாமன்’ படம் வெளியாகி இருந்தது. அஜித் நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ வெளியாகி இருந்தது. முன்னதாக சிறுத்தை சிவா இயக்கிய ‘வேதாளம்’ படத்தில் அஜித் உடன் காமெடி கதாபாத்திரத்தில் சூரி நடித்திருந்தார்.

இச்சூழலில் இந்த திடீர் சந்திப்பு பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது. அஜித் அடுத்ததாக, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அதில் சூரி நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான உரையாடல் நிகழ்ந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

actor soori met ajith in person and spoke to him
actor soori met ajith in person and spoke to him