viral video
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பாடும் தமிழ் பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

White girl singing Malarndhum Malaradha song – இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் சமந்தா ரேயான். இவர் தமிழ்நாட்டை சேர்ந்த கண்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தமிழ் கலாச்சாரம் மீது அதிக ஆர்வம் கொண்டவர் அவர் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

மேலும் தமிழ் மொழியின் மீது உள்ள பற்று காரணமாக தமிழ் மொழியையும் தீவிரமாக கற்று வருகிறார்.

குறிப்பாக தமிழ் பாடல்களை பாட கற்றுக்கொள்வதற்கு அவர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழரை கொன்று குவித்தாலும்….ஹிப் ஹாப் ஆதி கொந்தளிப்பு .!

சில மாதங்களுக்கு முன்பு விஜய் நடித்த மெர்சல் படத்தில் இடம்பெற்ற ‘நீதானே நீதானே’ பாடலை அவர் பாடி வெளியிட்டிருந்தார் அந்த அந்த வீடியோ வைரலாக பரவியது.

லட்சத்திற்கும் மேற்பட்டோர் அந்த வீடியோவை பார்த்திருந்தனர். இந்நிலையில் சிவாஜி, சாவித்திரி நடித்த ‘பாசமலர்’ படத்தில் இடம்பெற்ற ‘மலர்ந்தும் மலராத’ பாடலை அவர் பாடி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வைரலாக பரவி வருகிறது அவருக்கு தமிழர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.