கணவருடன் சஞ்சீவ் ஆல்யா வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த மணிமேகலை.. வீடியோ இதோ.!

கணவருடன் சேர்ந்து சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா வீட்டிற்கு மணிமேகலை சென்றுள்ளார்.

vj manimegalai visit to alya manasa house
தமிழ் சின்னத்திரையில் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. இவர்கள் சீரியல்களில் நடித்ததில் இருந்து காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கின்றனர்.
கயல் சீரியலில் கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார். ஆலியா மானசா சன் டிவியில் ஒளிபரப்பான இனியா சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்த நிலையில் அந்த சீரியலும் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மணிமேகலை கணவருடன் சேர்ந்து ஆலியா மானசா வீட்டிற்கு சர்ப்ரைசாக சென்றுள்ளனர். அங்கு அவர்களுடன் பேசி விட்டு பிறகு கிளம்பி உள்ளனர்.
இந்த வீடியோவை ஆல்யா மானசா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அன்றைய பொழுதை மிகவும் மகிழ்ச்சியாக பிடித்த நபர்களுடன் கழித்ததாக கூறி பதிவிட்டு உள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram