மார்க் ஆண்டனி படத்திற்கு கிடைத்த வரவேற்பால் ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார் விஷால்.

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல திறமையுடன் வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வினோத் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது மார்க் ஆண்டனி திரைப்படம்.

எஸ் ஜே சூர்யா உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா என இருவரும் எதார்த்தமான நடிப்பை கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்து இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

தொடர்ந்து எல்லோரும் பாசிட்டிவான விமர்சனங்களை கூறிவரும் நிலையில் ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி கூறி விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.