
Ayogya Release : விஷால் படத்தின் அயோக்கியா பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது. இந்த படமும் பொங்கலுக்கு வெளியாகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என பன்முக திறமைகளுடனும் பொறுப்புகளுடன் வலம் வருபவர் விஷால்.
இவர் தற்போது சண்டக்கோழி 2 படத்தை அடுத்து முருகதாஸின் இணை இயக்குனரான வெங்கட் மோகன் இயக்கத்தில் அயோக்யா படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
படத்தின் போஸ்டரில் ரிலீஸ் குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளனர். அதவது ஜனவரி 2019 ரிலீஸ் என்பது போல குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் இந்த படமும் பொங்கல் ரிலீஸ் தானோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே பொங்கல் ரேஸில் தல அஜித்தின் விஸ்வாசம், ரஜினிகாந்தின் பேட்ட, ஆர்.ஜே.பாலாஜியின் LKG, சிம்புவின் வந்தா ராஜாவாக தான் வருவேன் ஆகிய படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஷாலின் அயோக்கியா படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம் அல்லது குடியரசு தின விழாவான ஜனவரி 26-ல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.