
மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட தீ தீ விபத்தில் காயமடைந்த நடிகருக்கு உதவி செய்துள்ளார் நடிகர் விஷால்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் தற்போது மார்க் ஆண்டனி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்தத் திரைப்படத்தின் சண்டைக்காட்சி பூந்தமல்லியில் உள்ள ‘ஈவிபி’ பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அதில் பிரபா சங்கர் என்பவருக்கு தீ காயங்கள் ஏற்பட்டு கஷ்டப்பட்டு வருகிறார்.
இந்த விஷயம் அறிந்த நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை சார்பில் பிரபாசங்கர் அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 50,000 தொகையை வழங்க உத்தரவிட்ட நிலையில் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மக்கள் நல இயக்கத்தின் தலைவர் கண்ணன் ஆகியோர்கள் பிரபா சங்கரை நேரடியாக அவரது வீட்டில் சந்தித்து 50000 பணத்தை வழங்கியுள்ளனர்.

விஷால் செய்த இந்த உதவி குறித்து தகவல் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் விஷால் செய்த உதவிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.