இன்று சுந்தர்.சி பிறந்த நாள்: விஷால் நெகிழ்ச்சியுடன் பேச்சு..

Web Ads

இயக்குனர் சுந்தர்.சி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு விஷால் கூறிய நெகிழ்ச்சியான வார்த்தை பார்ப்போம்..

தமிழ் சினிமாவில் ‘உள்ளத்தை அள்ளித்தா’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, தற்போதும் வெற்றி இயக்குனராக சாதனை படைத்திருக்கிறார் சுந்தர்.சி.

‘கருத்து சொல்கிறேன்’ என போரடிக்க விடாமல், மகிழ்ச்சியை மட்டுமே திரையில் பரிமாறி, குழந்தை முதல் பெரியவர் வரை புன்னகை முகமாக அனைவரது மனங்களிலும் நிறைந்திருக்கிறார்.

இந்நிலையில், முன்னதாக சுந்தர்.சி-விஷால் கூட்டணி ஆம்பள மற்றும் ஆக்சன் ஆகிய படங்களில் இணைந்தது. இதனையடுத்து,12 வருடங்கள் கழித்து ‘மத கஜ ராஜா’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி, பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், வெற்றி விழா நடைபெற்றது.

இந்த விழாவில் மீண்டும் பழைய விஷாலாக அவர் கலந்துகொண்டது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

இச்சூழலில், இயக்குனர் சுந்தர்.சி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். அவருக்கு ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் விஷாலும் எமோஷனலாக தன் வாழ்த்துக்களை சுந்தர்.சி.க்கு கூறியுள்ளார். ‘நான் சந்தித்ததிலேயே மிக சிறந்த மனிதர்களில் ஒருவர், நீங்கள் தான் எனக்கு மருந்து’ என மிகவும் எமோஷனலாக பேசி, தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இவர்களின் கூட்டணி மீண்டும் இணைந்து பல வெற்றிகளை கொடுக்கவேண்டும் என்பது தான் அனைவரது விருப்பமாகவும் உள்ளது. வாழ்த்துகள் சுந்தர்.சி சார்..

vishal emotional post for director sundar c birthday
vishal emotional post for director sundar c birthday