வணங்கான் மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் வசூல்கள் எவ்வளவு.. பார்க்கலாம் வாங்க..!

Web Ads

வணங்கான் மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் வசூல் குறித்து பார்க்கலாம்.

How much are the collections of the movie Vanagaan and Kadhalikka Neramillai
How much are the collections of the movie Vanagaan and Kadhalikka Neramillai

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய் இவரது நடிப்பிலும் இயக்குனர் பாலா இயக்கத்திலும் ஜனவரி 10ஆம் தேதி வெளியான திரைப்படம் வணங்கான்.

இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படம் வெளியாகி 11 நாட்களாகும் நிலையில் இதுவரை ஒன்பது கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே சமயம் ஜனவரி 14ஆம் தேதி ஜெயம் ரவி மற்றும் நித்தியா மேனன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கி இருந்தார்.

இந்த படம் வெளியாகி ஏழு நாட்கள் கடந்த நிலையில் ஒன்பது கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

How much are the collections of the movie Vanagaan and Kadhalikka Neramillai
How much are the collections of the movie Vanagaan and Kadhalikka Neramillai