53 வயதில் கனவு நிஜமாகிவிட்டது.. அஜித்குமார் நெகிழ்ச்சி..!
53 வயதில் கனவு நிஜமாகி விட்டதாக அஜித் குமார் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக உள்ளது.
அதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படமும் ரிலீசுக்கு தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் துபாயில் 24 மணி நேரம் நடந்த கார் ரேஸில் பங்கேற்று இருந்தார்.
வெற்றிக்குப் பின் அஜித் எமோஷனலாக சில விஷயங்களை பேசி உள்ளார் அதில், கார் ரேஸில் அதிகம் ஆர்வம் ஏற்பட முக்கிய காரணம் எனது அப்பாவின் நண்பர் விமல் ஷா அங்கிள் தான் எனக்கு விளையாட்டை அறிமுகப்படுத்தியது என் அப்பா தான். 18 வயதில் வந்த கனவு இன்று 53 வயதில் நிஜமாகிவிட்டது.
இது மட்டும் இல்லாமல் நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் மக்கள் அவர்களது பணியை சரிவர செய்தால் வாழ்க்கையில் அவர்களுக்கு கிடைக்க வேண்டியது கண்டிப்பாக கிடைக்கும் வாழ்க்கை மிகவும் சிறியது பிடித்தது போல வாழுங்கள் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
