நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்.. ஊருக்கு நீ மகுடம்: ‘தல’ டோனி என்ரி; சென்னை ஃபேன்ஸ் ரெடி

Web Ads

கேப்டன் விஜயகாந்த் பட பாடல், சிஎஸ்கே கேப்டன் டோனிக்கு ஒலிபரப்பாக உள்ள நிகழ்வு பார்ப்போம்..

கிரிக்கெட் வரலாற்றில்,18-வது இந்தியன் பிரீமியர் லீக் போட்டி வரும் 22-ம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்கி நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் களமிறங்கவுள்ள இந்த தொடருக்கான போட்டி அட்டவணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு அணிகள் அனைத்தும் ஐபிஎல் களத்துக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில், சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு முதல் போட்டியே ஒருவருக்கொருவர் எதிராக மோதிக் கொள்கிறார்கள். இந்த போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று மார்ச் 19-ம் தேதி ஆன்லைனில் விற்றுத் தீர்ந்தன.

ஐபிஎல் போட்டியில் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் முக்கியமான விஷயம், அது சென்னை அணி வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கும்போது டி.ஜே. பாடலை ஒலிக்கச் செய்வது ஆகும். வீரர்களின் ஆட்டத்தை மையமாக கொண்டு பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது.

இந்நிலையில், ‘தல’ டோனிக்கு கடந்த ஆண்டு, ரஜினிகாந்தின் பல பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அவ்வகையில் இந்த ஆண்டு, டோனி களமிறங்கும்போது கட்டாயம் ஒரு பாடல் ஒலிபரப்பப்படுவது உறுதியாகிறது.

அதாவது, கேப்டன் விஜயகாந்தின் பொன்மனச் செல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள பாடலான ‘நீ பொட்டு வெச்ச தங்க குடம்’ பாடல், தல டோனி பேட்டிங் செய்ய களமிறங்கும்போது ஒலிபரப்பப்பட வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள்.

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ படத்தில் கெத்து கதாபாத்திரத்திற்கு இந்த பாடல் பயன்படுத்தப்பட்டது. பின்னர், இந்த பாடல் இணையத்தில் டிரெண்ட் ஆனது.

இச்சூழலில், மும்பை அணிக்கு எதிராக டோனி பேட்டிங் செய்ய களமிறங்கினால், அவருக்கு கட்டாயம் இந்த பாடல் ஒலிபரப்பாகும். இதனால் தல டோனி களத்தில் மீண்டும் கேப்டனாக வலம் வரப்போகிறார். அப்றமென்ன சென்னை ஃபேன்ஸ்க்கு கொண்டாட்டம்தான்..!

vijayakanth song will play for dhoni ipl 2025 csk vs mi match