சுந்தரவல்லி வெறுப்பேத்தும் சூர்யா, கோபத்தில் அர்ச்சனா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்ச. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் அசோகன் சூர்யாவிடம் எந்த காலத்திலும் நான் உனக்கு துரோகம் பண்ண மாட்டேன் மாப்பிள்ளை உனக்கு எல்லாமே தெரிய வரும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். கல்யாணம் இவங்க சின்னையாக்கு துரோகம் பண்றாங்க இவங்க நல்லாவே இருக்க மாட்டாங்க என்று நினைக்கிறார். மறுபக்கம் அர்ச்சனா சோபாவில் உட்கார்ந்து கொண்டிருக்க அர்ச்சனா அம்மா ஜூஸ் கொடுக்கிறார். ஒரு பொம்பள புள்ளையா வீட்டு வேலை ஏதாவது கத்துக்கலாம்ல்ல என்ற சொல்ல, ஜூஸ் கொடுத்துட்டு உடனே அட்வைஸ் பண்ணாத நீ போ என்று அனுப்ப என்ன சொல்லி என்ன பிரயோஜனம் எல்லாம் உங்க அப்பாவ சொல்லனும் என்று சொல்ல அந்த நேரம் பார்த்து மினிஸ்டர் வந்து விடுகிறார்.
உடனே அர்ச்சனா இது மாதிரி ஒரு கேரக்டர் கூட எத்தனை வருஷமா எப்படி வாழறீங்க உங்களுக்கு வாழ்நாள் சாதனை அவார்ட் கொடுக்கலாம். என்ன திட்டினால் உங்களுக்கு அவ்வளவு சந்தோஷமா என்று சொல்ல உன் பொண்ண பத்தி வெளியே எவ்ளோ பெருமையா பேசுறாங்க தெரியுமா என்று சொல்ல, அந்த நேரம் பார்த்து குக்கர் காண்ட்ராக்ட் வாங்கிய நபர் வருகிறார் அவர் அர்ச்சனாவிற்கு பூங்கொத்து கொடுத்தோம் மினிஸ்டருக்கு சால்வை அணிவித்தும் நன்றி சொல்லுகின்றனர். உங்களுக்கு எல்லாம் ஓகே தானே என்று அர்ச்சனா சொல்ல சூர்யாவிற்கு டெண்டர் கிடைக்கவில்லை என்று இன்னும் முகத்தில் ஈ ஆடல என்று சொல்லிவிட்டு செல்கின்றனர். எப்படிமா இதை முடிச்ச என்று கேட்க அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தால் எல்லாம் நடக்கும் என்று சொல்லுகிறார். அர்ச்சனாவின் அம்மா சூர்யா சொன்னாங்க எந்த சூர்யா எந்த காண்ட்ராக்ட் என்று கேட்க எல்லா அந்த சுந்தரவல்லி ஓட பையன் தான் என்று சொல்லுகிறார்.
ஒரு பக்கம் சூர்யா கூட வாழனும்னு சொல்ற இன்னொரு பக்கம் அவனை தோற்கடிக்கிற எனக்கு ஒன்னும் புரியல என்று சொல்ல உனக்கு புரியாம இருக்கிறதே நல்லது என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். அந்த நேரம் பார்த்து ரேணுகா அர்ச்சனா வீட்டுக்கு வர நீங்க பத்த வச்ச நெருப்பு அங்க பத்திகிட்டு எரியுது கொழுந்துவிட்டு எரியுது என்று சொல்ல சந்தோஷமான விஷயத்தை தெளிவா சொல்லு என்று சொல்லுகிறார். நீங்க காண்ட்ராக்ட் பண்ண விஷயத்துல சூர்யா சார் அவங்க அக்காவையும் மாமாவையும் பயங்கரமா திட்டினாரு. இது மட்டும் இல்லாம அவங்க ரெண்டு பேரையும் வீட்டை விட்ட வெளியே போக சொல்ற அளவுக்கு கோபப்பட்டார். அது மட்டும் இல்லாம அந்த மாதவி சூர்யாவுக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும் அதனாலதான் இது மாதிரி பண்ணதாகவும் சொன்னவுடன் எல்லாரும் நம்பிட்டாங்க என்று சொல்லுகிறார் இதிலிருந்து என்ன தெரியுதுன்னா மாதவி ரொம்ப கேடி என்று தெரியுது என்று சொல்லுகிறார். அப்போ நீ அவங்க கிட்ட கொஞ்சம் உஷாரா இரு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
மறுபக்கம் சுரேகாவின் கார் வழியில் ரிப்பேர் ஆகி நிற்க என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். உடனே சர்வீஸ் செய்ய கம்பெனிக்காரர்களுக்கு பண்ண இப்ப யாரும் அவைலபிலா இல்லை என சொல்லி போனை வைத்து விடுகின்றனர் நானே எக்ஸாம் அப்பதான் காலேஜ் போகணும்னு நினைக்கிறேன் இப்ப வேற இது மாதிரி ஆகுது என்று டென்ஷன் ஆக இருக்கிறார். உடனே கொஞ்ச நேரத்தில் சுரேகாவுடன் கூட படிக்கும் பையன் ஒருத்தன் வந்து என்னாச்சு என்று கேட்க கார் ரிப்பேர் ஆயிருக்கு என்று சொல்ல இன்னைக்கு எக்ஸாம் வேற இருக்கு என் கூட பைக்ல வரியா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என சொல்லுகிறார். நான் கேப் புக் பண்ணிக்கிறேன் என்று சொல்லி கேப் புக் பண்ண புக் ஆகாமல் கேன்சல் ஆகிவிடுகிறது. உடனே அந்தப் பையன் உன்னை என்ன பண்ணிடப் போறேன் காலேஜ்க்கு தானே போறோம் வா என்று கூப்பிட சுரேகாவும் வேறு வழி இல்லாமல் அவனுடன் வண்டியில் ஏறி செல்கிறார். கிச்சனில் நந்தினி வேலை பார்த்துக் கொண்டிருக்க கல்யாணம் இந்த வீட்ல என்னமா நடக்குது. இருக்க வீடு துணி நகை பணம் எல்லாருக்கும் ஆனா இப்படி உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணலாமா என்று கோபப்பட, அதற்கு நந்தினி சூர்யா சார் கொலை பண்ண கொலை மிரட்டல் வந்ததாக சொல்றாங்க இல்ல அதனால தான் விடுங்க என்று சொல்லுகிறார். உடனே நந்தினி குமட்டல் வரும் மாதிரி செய்ய ரேணுகா என்னாச்சு என்று கேட்கிறார் நெஞ்செரிச்சலா இருக்கு வாந்தி வர மாதிரி இருக்கு என்று சொல்லுகிறார் நந்தினி.
உடனே நந்தினி ஓடிப்போய் வாந்தி எடுக்க, கல்யாணம் என்ன ஆச்சு என்று யோசித்து, ரெசார்ட்டுக்கு போனாங்க வந்தாங்க இப்போ வாந்தி என்று சந்தோஷப்பட்டு வீட்டில் இருக்கும் அனைவரையும் சென்று கூப்பிட்டு சந்தோஷமாக சொல்ல சூர்யா வந்தவுடன் நந்தினி அம்மா வாந்தி எடுக்குறாங்க என்று சொல்ல அதுக்கு என்ன இப்போ என்று கேட்க அருணாச்சலம் சூர்யாவை தனியாக அழைத்து சென்று பேச உடனே பின்னால் சுந்தரவல்லி இருப்பதை பார்த்து இதை ஏன் டாடி சீக்ரெட்டா சொல்றீங்க சந்தோஷமா சொல்லுங்க என்று சொல்லி துள்ளி குதித்துக் கொண்டு நந்தினி இடம் சென்று இவ்ளோ சீக்கிரம் நம்ம அம்மா அப்பா ஆவோம் என்று நினைக்கல என்று சந்தோசத்தில் குதிக்கிறார். நந்தினி பேச வர, சூர்யா எதுவும் பேசாத என்று சொல்லிவிட்டு கல்யாணம் மற்றும் ரேணுகாவிடம் என் பொண்டாட்டி எந்த வேலையும் செய்யக்கூடாது என்று சொல்ல ரேணுகா இவ கர்ப்பமான விஷயத்தை அர்ச்சனா அம்மா கிட்ட சொல்லணும் என நினைக்கிறார். உடனே நந்தினி இடம் சீக்கிரமா போய் டாக்டர் கிட்ட கன்ஃபார்ம் பண்ணிட்டு வந்துடலாம் என்று அழைத்து செல்கிறார். சுந்தரவல்லி அமைதியாக இருக்க மாதவி என்னமா இப்படி அமைதியா இருக்கீங்க என்று சொல்ல என்ன பண்ண சொல்ற அவளை வீட்டை விட்டு துரத்தனும்னு பாத்தா இப்போ குழந்தை பொறக்க போகுதுன்னு சொல்றாங்கஅவ மட்டும் குழந்தைய பெத்துட்டானா நானே நினைச்சாலும் அவளை இந்த வீட்டில் இருந்து அனுப்ப முடியாது என்று சொல்ல மாதவி நாங்க பாத்துக்கிறோம் என்று சொல்லுகிறார். டாக்டரிடம் நந்தினி ஒன்னும் பிரச்சனை இல்ல சாதாரணமான வாந்தி தான் என்று சொல்ல இதைத்தான் நான் அப்பவே சொன்னேன் அதுக்காக என்ன கூட்டிட்டு வந்துட்டாரு என்று சொல்ல இது மாதிரி ஹஸ்பண்ட் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும் என்று சொல்லுகிறார்.
இந்த மருந்து சாப்பிடுங்க சரியா போயிடும் என்று சொல்லி அனுப்ப, நந்தினி வெளியில் வந்து நான் சீரகத் தண்ணீர் குடிச்சிருந்தாலே நல்லா இருக்கும் எதுக்கு இதெல்லாம் என்று சொல்ல, டாக்டரை பார்த்தாச்சு மெடிசன் வாங்கிடலாம் என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் என நந்தினி சொல்லுகிறார் சூர்யா மருந்து வாங்க போக ரெண்டு வேலைக்கு மட்டும் போதும் என்று நந்தினி சொல்லுகிறார். கொஞ்சம் தூரம் வந்து சூர்யா கல்யாணத்துக்கு போன் போடுகிறார். எங்க இருக்க என்று கேட்க வீட்லதான் இருக்கேன் என்று சொல்ல நந்தினி அம்மாவுக்கு என்ன ஆச்சு என்று கேட்க, சூர்யா நேரா போய் பட்டாசை வாசலில் ரெடி பண்ணிவை என்று சொல்ல எதுக்கு என்று கேட்கிறார் நான் எதுக்கு நந்தினி கூட்டிட்டு வந்தேன் இப்ப எதுக்கு பட்டாசு வெடிக்க சொல்ற என்று சொல்ல உடனே கல்யாணம் சந்தோஷப்பட்டு உடனே செய்கிறேன் என சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினி உடன் காரில் வந்து இறங்க பட்டாசு வெடித்தவுடன் சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் நான் இந்த வீட்டு மருமகளே இல்லைன்னு அவளை சொல்லிக்கிட்டு இருக்க அப்புறம் எப்படி இதெல்லாம் என்னால அனுமதிக்க முடியாது என்று சொல்லுகிறார். அவ கர்ப்பமா இருக்காளா என் சூர்யாவோட குழந்தை அவ வயிதில்லையா என்று அர்ச்சனா டென்ஷனாகிறார்.
என் பொண்டாட்டி நந்தினி கர்ப்பமா இருக்கா இன்னும் பத்து மாசத்துல ஒரு குட்டி பாப்பா வரப்போகுது என்று சொல்லி நந்தினியை தூக்குகிறார்.என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
