முத்துவிடம் சிக்குவாரா மணி? சந்தோஷத்தில் அண்ணாமலை குடும்பத்தினர்.. இன்றைய சிறுகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலை குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருக்கிறார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 20-03-25
SiragadikkaAasai Serial Today Episode Update 20-03-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை முத்து ரவி மூவரும் சாப்பிட வர அதற்கு முன் மனோஜ் உட்கார்ந்து வெளுத்து வாங்கிக் கொண்டு இருக்கிறார் அண்ணாமலை நீ என்னமோ உன் பொண்டாட்டி விட்டு சாப்பிட மாட்டேன்னு சொன்னேன் இங்கே பார்த்தா முதல் ஆள வந்து உக்காந்து சாப்டுட்டு இருக்கான் என்று சொல்ல நான் அப்படி தான்பா நினைச்சேன் என்று சொல்லிவிட்டு மூவரும் மனோஜ் பக்கத்தில் வருகின்றனர். டிபன் எல்லாம் சூப்பரா இருக்கு சாப்பிடுங்க உட்காருங்க என்று மனோஜ் சொல்ல பிறகு மூவரும் மனோஜ் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடுகின்றனர்.

கொஞ்ச நேரத்தில் கறிக்கடைக்காரர் மணி வெளியில் வந்து போன் பேச அனைவரும் சிரித்து பேசிக் கொண்டு சாப்பிடுவதால் அதை கவனிக்காமல் விடுகின்றனர். பிறகு மீனா உடன் வேலை செய்யும் நபர்கள் மாலையை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க மீனாதை வாங்கிக் கொண்டு செல்கிறார் பிறகு அந்தப் பெண் கறிக்கடைக்காரர் மணியை பார்த்துவிட நீங்க என்று கேட்க இது என் தங்கச்சி பையனோட கல்யாணம் என்று சொல்லுகிறார் அப்படியா நாங்க தான் எங்க டெக்கரேஷன் பண்ணோம். அது போல அந்த பொண்ணு தான் ஆர்டர் எடுத்து இருக்கா என்று சொல்ல அதற்குள் மீனா சென்று விடுகிறார். பிறகு மணி ரொம்ப சந்தோஷம் எல்லாரும் இருந்து சாப்பிட்டு தான் போகணும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

கொஞ்ச நேரத்தில் மீனா வந்தவுடன் அந்த பெண் நம்ப அன்னைக்கு ஒரு நாள் கறி கடைக்கு போனோம் இல்ல அவர்தான் பொண்ணு மாப்பிள்ளைக்கு தாய் மாமாவா என்று சொல்ல ஆமாக்கா டெக்ரேசன் நல்லா இருக்கு என்று சொல்லிக்கிட்டு இருந்தாரு அவரு தான் எல்லாத்தையும் இழுத்து போட்டு செய்றாரு என்று, அன்னைக்கு சரியா பாக்கல என்று சொல்ல சரி விடுங்க அப்புறம் பாத்துக்கலாம் என்று சொல்லி கிளம்பி விடுகின்றனர். மறுபக்கம் சுருதி போட்டோ எடுத்துக் கொண்டிருக்க விஜயா வருகிறார் விஜயாவை நிறுத்தி இந்த சேரில நீங்க அழகா இருக்கீங்க போட்டோ எடுக்கவா என்று கேட்டு உடனே போட்டோ எடுக்கிறார். இதை கவனித்த ரோகினி வர ரோகினி இடம் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். அந்த நேரம் பார்த்து மீனா வர விஜயா ரோகினி மற்றும் ஸ்ருதியுடன் சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஏக்கமாக நிற்கிறார். உடனே ஸ்ருதி மீனாவை பார்த்து விட வாங்க போட்டோ எடுத்துக்கலாம் என்று கூப்பிட விஜயா நான் போய் சாப்பிட போறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட மீனாவின் முகம் மாறுகிறது சரி வாங்க மீனா நம்ம போட்டோ எடுத்துக்கலாம் என்று கூப்பிட மீனா ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டு சரி வாங்க நம்மளும் சாப்பிட போகலாம் என்று சென்று விடுகிறார்.

மறுபக்கம் முத்து எதையோ பார்த்துவிட்டு உடனே அப்பா கிட்ட போய் சொல்லனும் என்று அண்ணாமலை இடம் வருகிறார். அண்ணாமலை என்ன விஷயம் என்று கேட்காத நீயே வந்து பாருப்பா எனக்கு ஒண்ணுமே புரியல என்று சொல்லி அழைத்து வர, விஜயா மருமகள் மூவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டு சாப்பிடுவதை பார்த்து அண்ணாமலை சந்தோஷப்படுகிறார்.இதே மாதிரியே இருந்தா நல்லா இருக்கும் என்று சொல்லி அவர்களுக்கு பரிமாற வருகின்றனர்.

இவர்கள் நால்வரும் அவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருக்க அதை வீடியோ எடுத்து சந்தோஷப்படுகின்றனர். கொஞ்ச நேரத்தில் பரசு அண்ணாமலை மாப்பிள்ளையோட தாய் மாமாவை உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன் வரேன் இரு என்று சொல்லிவிட்டு அவரைத் தேடிச் செல்கிறார். அதற்குள் இவர்கள் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டு வீடியோ எடுக்க முத்து அண்ணாமலையை ஊட்டி விட சொல்லுகிறார். பிறகு அங்கு இருக்கும் கேமராமேனை கூப்பிட்டு எங்க வீடியோ எடுங்க என்று சொல்லி நால்வரும் பொண்டாட்டிக்கு ஒரே மாதிரி விட்டு விடுகின்றனர் உடனே கேமரா மேன் அதே மாதிரி நீங்க நாலு பேரும் ஹஸ்பண்டுக்கு ஊட்டி விடுங்க என்று சொல்லி சொல்ல நால்வரும் ஊட்டி விடுகின்றனர். குடும்பமாக சந்தோஷமாக இருக்க மறுபக்கம் கறிக்கடைக்காரர் மணியை பரசு தேடிக் கொண்டிருக்கிறார் அவர் சமையல்காரர் தான் சமையல் சூப்பரா இருந்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பரசு அங்கு வந்து விட உங்கள அண்ணாமலை குடும்பத்துடன் அறிமுகப்படுத்தி வைக்கிறேன் வாங்க என்று கூப்பிட அதற்குள் சமையல்காரர் உடம்பு முடியாமல் மயக்கம் அடைந்து விடுகிறார் இப்ப சமைக்கிறதுக்கு என்ன பண்றது என்று சொல்ல மணி நானே பார்த்துக்கொள்கிறேன் எனக்கு சமையல் அனுபவம் இருக்கு என்று சொல்லி அவரே சமைக்க ஆரம்பிக்கிறார். பிறகு என்ன நடக்கிறது? முத்துவின் கண்ணில் மணி சிக்குகிறாரா? ரவி என்ன சொல்லுகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 20-03-25
SiragadikkaAasai Serial Today Episode Update 20-03-25