Vijay Spl Video
Vijay Spl Video

இன்று உலகெங்கும் உள்ள தமிழக மக்கள் தமிழ் புத்தாண்டை விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். ரஜினி, கமல் போன்ற பிரபலங்களும் டிவிட்டர் மூலம் ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதில் அட்லியும் ஒருவர். ஆனால் வெறுமனே வாழ்த்து சொல்லாமல் மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடலை டிவீட் செய்து வாழ்த்தி கூறியுள்ளார்.

மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் எனும் பாடலை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் விவேக் பாடல் வரிகளில் உருவான அப்பாடல் தற்போது யூ டியூபில் 100 மில்லியன் வியூஸ் பெற்று அசத்தியுள்ளது.

தமிழர்கள் பெருமையை பறைசாற்றும் விதமாக உருவாகியிருந்த இப்பாடல்தான் இன்று வாட்ஸ் அப், டிவிட்டர், ஃபேஸ்புக் என எல்லா இடங்களிலும் அதிர்ந்து கொண்டிருக்கிறது.