Vijay Sethupathi Next Movie Announcement

விஜய்சேதுபதி-யின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது என்றே கூறலாம்.

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு ஒன்றல்ல இரண்டல்ல பல வெற்றி படங்களை கொடுத்து வருபவர் விஜய்சேதுபதி. இவருடைய நடிப்பில் விரைவில் சீதக்காதி திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் விஜய்சேதுபதியின் அடுத்த பட அறிவிப்பும் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜா என அப்பா மகன் இருவரும் இணைந்து இசையமைக்கவும் உள்ளனர்.

இதனால் இந்த படத்தின் அறிவிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.