பாலிவுட் இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் மேரி கிறிஸ்மஸ் திரைப்படத்தில் ரிலீஸ் செய்தியை படக்குழு அறிவித்துள்ளது.

கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் DSP, யாதும் ஊரே யாவரும் கேளிர், விடுதலை உள்ளிட்ட திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக்கான் உடன் ஜவான் படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி தற்போது வரிசையாக பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் சேதுபதி தற்போது பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் “மேரி கிறிஸ்துமஸ்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் இந்தியில் வெளியாக இருக்கும் இப்படத்தில் தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு செல்லும் இளைஞனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறாராம்.

இப்படம் தொடர்பான அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.