Vijay Sethupathi in Upcoming Movies in Summer 2021

சம்மரில் விஜய் சேதுபதியின் 4 படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi in Upcoming Movies in Summer 2021 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. சாதாரண ஸ்டண்ட் மாஸ்டர் தன்னுடைய பயணத்தை தொடங்கிய விஜய்சேதுபதி அதன்பின்னர் சில குறும் படங்களில் நடித்தார். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவிலேயே ஒரு வருடத்திற்கு பல படங்களைக் கொடுக்கும் நடிகராக இடம் பிடித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் ஏற்கனவே மூன்று திரைப்படங்கள் வெளியாகி விட்ட நிலையில் மேலும் நான்கு திரைப்படங்கள் வரும் சம்மரில் வெளியாக உள்ளன. வரும் ஏப்ரல் 14ஆம் தேதி விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் இணைந்து நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் டெல்லி பிரஷாத் தீன தயாளன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை தொடர்ந்து ஏப்ரல் 30ஆம் தேதி லாபம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் எஸ்பி ஜனநாதன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் இணையதளம் வழியாக வெளியாக உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ள இந்தப் புகைப்படங்களை தொடர்ந்து மே 14-ஆம் தேதி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் மேகா ஆகாஷ், விவேக் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து மே 28-ஆம் தேதி சீனு ராமசாமி இயக்கியுள்ள மாமனிதன் திரைப்படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில் படக்குழு இந்த தேதியில் வெளியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் விஜய்சேதுபதி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் நான்கு படங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.