பீஸ்ட் படத்தை பார்த்து தளபதி விஜய் கொடுத்த விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay Review on Beast Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார்.

பீஸ்ட் படத்தைப் பார்த்து விஜய் கொடுத்த விமர்சனம்.. நெல்சன் வெளியிட்ட தகவல் - அப்போ இது கண்டிப்பா நடக்கும்.!!

படத்தில் லாஜிக் இல்லை, திரைக்கதை சரியில்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களும் விஜயை மட்டுமே நம்பி எடுத்த படம் போல் தெரிகிறது. நிறைய நடிகர்கள் இருந்தும் அவர்களைப் பயன்படுத்தவில்லை என பலரும் கூறி வருகின்றனர்.

இந்தநிலையில் நெல்சன் திலீப் குமார் தளபதி விஜய் படத்தை பார்த்து விட்டு படம் எனக்கு பிடித்திருக்கிறது. என்னிடம் என்ன சொன்னாயோ அதை நீ செய்து காட்டி விட்டாய் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். நெல்சன் கூறியுள்ள தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

பீஸ்ட் படத்தைப் பார்த்து விஜய் கொடுத்த விமர்சனம்.. நெல்சன் வெளியிட்ட தகவல் - அப்போ இது கண்டிப்பா நடக்கும்.!!

இதன் மூலம் விஜய் நெல்சன் கூட்டணி மீண்டும் அமைய இருப்பதாக வெளியான தகவல் உறுதியாகிவிட்டது.