திருநங்கை வேடத்தில் நடிக்க அழைப்பு வந்ததை பற்றி ரஜினிகாந்த் ஆலோசனையில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழ் சினிமாவில் தாதா 87 படத்தில் திருநங்கை கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியவர் விஜய் ஸ்ரீ ஜி.
சமீபத்தில் நடந்த தர்பார் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் திருநங்கை வேடத்தில் நடிக்க ஆசைப்படுவதாக கூறி இருந்ததை அடுத்து அவருக்கும் கதை தயாராக இருப்பதாக இயக்குனர் விஜய் ஸ்ரீ அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த செய்தி ரஜினியின் செவிக்கு செல்ல அவரும் இது பற்றி ஆலோசித்து வருவதாக தற்போதைய தகவல்கள் கூறுகின்றன.
இது பற்றி விஜய் ஸ்ரீ அவர்கள், ரஜினி திருநங்கை வேடத்தில் நடித்தால் திருநங்கையர் பற்றிய விழிப்புணர்வு அவர்களின் மீதான மதிப்பு சமூகத்தில் அதிகமாகும். நல்லதே நடக்கும் என எதிர்பார்க்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம் என கூறுகிறார்.