விஜய் நட்சத்திர கொண்டாட்டம் கடந்த வாரம் 14, 15 ஜூலை 2024, விருத்தாசலம் மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஏராளமான ரசிகர்கள் தங்கள் அபிமான நட்சத்திரங்களை நேரில் காண வந்திருந்தனர். சுமார் 5000 கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் சுசித்ரா, அக்ஷிதா (பாக்கியலட்சுமி) தொடரில் இருந்தும், பிரவீன் ஆதித்திய, அஞ்சலி பாஸ்கர் ‘சக்திவேல்’ தொடர், லட்சுமி பிரியா, ஸ்வாமிநாதன், மகாநதி தொடர், ராஜாவேல் , யோகி, கலக்கப்போவது யாரு தொடர், ஹர்ஷினி, கௌரவ் , சஞ்சீவ், லின்ஸி , சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்தும் வந்து கலந்துகொண்டு நேயர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

வரும் வாரம் சனி மற்றும் ஞாயிறு 21, 22 ஜூலை திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் நடைபெறும். இதில் பங்குபெறப்போகும் நட்சத்திரங்களின் பெயர்கள் விஜய் டிவி விரைவில் அறிவிக்கும்.