விஜயாவிடம் உண்மையை சொல்லி பல்பு வாங்க, முத்து ஷாக் கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மற்றும் மீனா வீட்டுக்கு வர முத்து சோகமாக இருப்பதை பார்த்து அண்ணாமலை போனப்ப சந்தோஷமா தானே போனீங்க இப்ப ஏன் மூஞ்சி சோகமா இருக்கு என்று கேட்கிறார்.கிருஷ் பாத்தீங்களா எப்படி இருக்கான் என்று அண்ணாமலை நலம் விசாரிக்க, கிருஷ் நல்லா தான்பா இருக்கான் ஆனா அவங்க பாட்டிக்கு தான் ரொம்ப உடம்பு சரியில்ல படுத்துகிட்டு இருந்தாங்க ரொம்ப கஷ்டமா இருந்தது என்று சொல்லுகிறார். இந்த நிலைமையில் கூட ஒரு பொண்ணு வந்து பாக்காம இருந்தா அது எவ்வளவு பெரிய பிராடு இருக்கும் என்று முத்து கோபப்படுகிறார். அந்த நேரம் பார்த்து விஜயா வர அமைதியான முத்து அவர் ரூமுக்கு சென்றவுடன் கிரிஷை தத்தெடுக்கப் போகும் விஷயத்தை அப்பாவிடம் சொல்கிறார். அவங்க முடியாதுன்னு சொன்னாலும் நான் கம்பெல் பண்ணி கூட்டிட்டு வர தான் போறேன் என்று முத்து சொல்ல இதையெல்லாம் மறைந்து நின்று கேட்டுக் கொண்டு அதிர்ச்சியாகிறார் ரோகிணி.
உடனே விஜயாவிடம் சென்று ரோகிணி நடந்த விஷயங்களை சொல்ல, விஜயா கூலாக அந்தப் பையன கூட்டின்னு வரட்டும் அதையே சாக்கா வச்சு அவங்களை வெளியே அனுப்பிவிடுவேன் என்று திட்டம் போடுகிறார். ஆனால் தத்தெடுப்பதை தடுக்க விஜயா எதுவும் சொல்லாததால் ரோகினி பல்பு வாங்குகிறார். இவங்க கிட்ட சொன்னா சரி ஆகாது இதுக்கு நம்மளே ஏதாவது ஒரு முடிவு பண்ணனும் என்று நினைக்கிறார்.
ரோகினி கிருஷ்க்கு ஸ்கூல் சேர்க்க விசாரிக்க வருகிறார். தோழி வித்யாவுடன் வர சிட்டிக்கு வெளியே ஏன் இவ்வளவு தூரத்துல ஸ்கூல் பாக்கணும் என்று கேட்கிறார். சிட்டிக்குள்ள அந்த முத்து மீனாவும் எங்க வேணா சுத்திகிட்டு இருப்பாங்க அவங்க கண்ணுல கிரஷ் படாம இருக்கணும்னா இந்த ஸ்கூல் தான் பெஸ்ட் ஆக இருக்கும் என்று சொல்லுகிறார். ரோகினியின் தோழி வித்தியா எனக்கு ஒரு ஐடியா தோணுது என்று சொல்லுகிறார் என்ன என்று கேட்க பேசாம கிரிஷ நீ தத்தெடுத்துக்கோ என்று சொல்ல, இதுதான் உன் ஐடியாவா மனோஜ் இதற்கு சம்மதிக்கவே மாட்டான் மனோஜ் சம்மதிச்சாலும் என் மாமியார் சலங்கை கட்டிக்கிட்டு ஆடுவாங்க என்று சொல்லுகிறார் ரோகிணி.
பிரின்ஸ்பல் சந்தித்த ரோகினி ஃபார்ம் வாங்கிக் கொண்டு மத்த டீடைல்ஸ் கேட்டு கொள்கிறார். இன்னும் இரண்டு நாட்களில் வந்து பீஸ் கட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறார். பிறகு அவங்க அம்மாவிற்கு ஃபோன் போட்டு புதுசா வீடு பார்த்துட்டேன் ஸ்கூல்லை அட்மிஷன் வாங்கிட்டேன் அடுத்த வாரம் உங்க ரெண்டு பேரையும் வந்து கூட்டிட்டு வரேன் என்று சொல்லு சரி சந்தோஷம் என்று சொல்கிறார் அம்மா.
பூ கட்டிக் கொண்டிருந்த மீனாவிடம் விஜயா பார்வதி வீட்டிற்கு மதியம் சாப்பாடு எடுத்துக் கொண்டு வா என்று சொல்ல அதற்கு மீனா என்ன சொல்லுகிறார்? முத்து சொன்ன பதில் என்ன? என்ற இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.