திரைப்பயணத்தில் 27 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளார் சூர்யா.
நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சூர்யா. அதனைத் தொடர்ந்து நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு போன்ற பல திரைப்படங்கள் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர்.
தற்போது இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்திலும், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற தகவலை படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது 27 வருடங்களாக திரை பயணத்தில் வெற்றிகரமாக கடந்து வந்த சூர்யாவிற்கு போஸ்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதில், 27 ஆண்டுகள் நிறைவடைய எங்கள் வாழ்த்துக்களும் அன்பும் சூர்யா சார்.நீங்கள் மேலும் பாராட்டுக்கள் மற்றும் சிறந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இந்தப் பதிவால் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஹேஷ்டேக் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.