பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராமமூர்த்தி என்ற கதாபாத்திரம் இறந்து விட்டதாக ஒரே சோகத்துடன் நடந்து கொண்டு வருகிறது.
இந்த சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அக்ஷிதா. இவர் விஜய் டிவி ஒளிபரப்பாக போகும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளப் போவதாக தகவல் கசிந்துள்ளது. இதுவரை போட்டியாளர்களின் லிஸ்ட் என பல வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என்பதை அதிகாரப்பூர்வமாக வீடியோவுடன் விஜய் டிவி வெளியிட்டிருந்தது.