ராமமூர்த்தியின் இறுதி சடங்கு நடக்க குடும்பத்தினர் அனைவரும் கதறி அழுதுள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்திக்கு செய்யும் இறுதி சடங்குகள் அனைத்தும் செய்கின்றனர். ஈஸ்வரி ராமமூர்த்தியின் துண்டை இனியாவிடம் சொல்லி எடுத்துக்கொண்டு வர சொல்லி ராமமூர்த்தியின் மேல் போடுகிறார். பிறகு எழில் வாங்கி வந்த வாட்ச்சை நல்லா இருக்கு நான் போட்டுட்டு வெளிய எல்லாம் போவேன் என்று சொல்லி சந்தோஷப்பட்டார் என்பதை சொல்லி வாட்ச்சை அவர் மீது வைத்து அழுகிறார்.
மீண்டும் சொந்தக்காரர் ஒருவர் இப்பயும் ஒன்னும் தப்பு இல்ல கோபிய இறுதி சடங்கு செய்ய விடலாம் நம்ம பழக்கத்துல பொம்பளைங்க யாரும் கொல்லி போட்டதில்லை என்று ஆரம்பிக்கின்றனர். ஆனால் ஈஸ்வரி பாக்யா தான் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
பிறகு பழனிச்சாமி டைம் ஆயிடுச்சு அப்பாவ எடுத்துனு போலாம் என்று சொல்ல நான் ஒரு ரெண்டு நிமிஷம் பாத்துக்கிறேன் பா இதுக்கப்புறம் எப்ப பாக்கணும் தெரியல என்று ராமமூர்த்தியின் மேல் சாய்ந்து அழுகிறார். ராமமூர்த்தியின் உடலை வெளியே எடுத்துச் சென்று வைக்க குடும்பத்தினர் அனைவரும் கதறி அழுகின்றனர்.
கடைசியாக இறுதி சடங்கு செய்யும் இடத்தில் அவருக்கு இறுதி மரியாதை அனைவரும் செலுத்தினர். கடைசியாக முகத்தை பார்க்கிறவர்கள் பார்த்துக்கோங்க என்று சொல்லும்போது பாக்யா இதுவரைக்கும் நான் வீட்டுக்கு வந்த நாளிலிருந்து நீங்க என்னோட பொண்ணு பொண்ணு தான் சொல்லி இருக்கீங்க ஆனா இதுவரைக்கும் நான் உங்களை அப்பானு கூப்பிட்டது இல்ல. இப்போ நான் ஒருவாட்டி அப்பான்னு கூப்பிடவா என்று சொல்லி அப்பா எழுந்திருங்க அப்பா என்று ராமமூர்த்தியை கட்டிப்பிடித்து கதறி அழுகிறார்.
இறுதிச் சடங்கு எப்படி முடிந்தது? கோபி என்ன செய்தார் என்று இன்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.