Web Ads

விஜய்-சங்கீதா வாழ்க்கை பற்றி, எதிர்த்தரப்புக்கு அவ்வளவு அக்கறை, பாசம்: வைரலாகும் கருத்து

விஜய்-சங்கீதா வாழ்க்கை குறித்து, விஜய்யின் தாய் தெரிவித்த தகவல் காண்போம்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் முடிவடைந்ததும் அரசியல் பணியாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில், தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவும் நடைபெற்று, அதில் விஜய் முழங்கிய ‘கல்வி’ பற்றிய பேச்சு தற்போது விவாதப் பொருளாகி வருகிறது.

இச்சூழலில், விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் பிரச்சினை என்று சில மாதங்களாகவே தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. அதனை மையமாக வைத்து விஜய்யை சாட ஆரம்பித்திருக்கிறார்கள் அவருக்கு எதிர்த் தரப்பில் இருப்பவர்கள்.

ஆனால், இதில் துளி கூட உண்மையில்லை. இரண்டு பேரும் சேர்ந்துதான் வாழ்கிறார்கள். விஜய்யின் இமேஜை டேமேஜ் ஆக்கத்தான் பலரும் அவரது குடும்ப விஷயத்தை தோண்டுகிறார்கள் என தவெகவினர் தெரிவிக்கிறார்கள்.

விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு சங்கீதா என்ன சொன்னார் என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு எஸ்.ஏ.சியோ, ‘வேண்டாம் வேண்டாம்’ என்று அந்தக் கேள்வியை தவிர்த்துவிட்டார். இந்நிலையில், இது தொடர்பாக விஜய்யின் தாய் ஷோபா விளக்கம் அளித்ததாவது:

‘சங்கீதா ரொம்ப நல்ல பெண். முழுக்க முழுக்க ஹவுஸ் வைஃபாக இருக்கிறார். அவர் போல் பிள்ளைகளை வளர்க்கவே முடியாது. அவர்கள் மீது அவ்வளவு பாசத்தை கொட்டுகிறார். அதனை நான் கண்களால் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

அதேபோல், பிள்ளைகளுக்கு ஏதாவது வேண்டுமென்றால் வேலைக்காரர்களை விட்டுக் கொடுக்க சொல்லமாட்டார். எதுவாக இருந்தாலும் தன் கைகளால் மட்டும்தான் கொடுப்பார்’ என்றார்.

அதாவது, நிகழ்ச்சிகளில் விஜய், சங்கீதாவுடன் ஜோடியாக பங்கேற்க வேண்டும் என எதிர்த்தரப்பினர் எதிர்பார்க்கிறார்கள். விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மீது அவர்களுக்கு அவ்வளவு அக்கறை, பாசம்.! இனியாவது விஜய் இவர்களின் பாசத்திற்கு மதிப்பளித்து ஃபாலோ செய்வாரா? எனவும் நெட்சன்ஸ் தெறிக்க விடும் கருத்து செம வைரலாகி வருகிறது.