Web Ads

‘காவாலா’ ஆட்டத்துக்கு போட்டியாக, பூஜாவின் ஹாட் ஸாங்: ‘கூலி’ பட அப்டேட் வெளியீடு

நேற்று தமன்னா ஆடிய ஆட்டமா; இன்று பூஜா போட்ட ஆட்டமா, எது ஹாட்? என நாளைய அப்டேட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றி எரியும் தகவல் பார்ப்போம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் காம்போவில் உருவாகும் ‘கூலி’ ஷூட் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, அன்பறிவ் சண்டைக் காட்சிகளால் மிரட்டியுள்ளனர். சண்டைப் பயிற்சியாளர்களான அன்பறிவ் இயக்கத்தில் விரைவில் கமல்ஹாசன் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ‘கூலி’ படத்தின் புதிய அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரஜினி பட ஆர்வலர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

‘கூலி’ படத்தில் இடம்பெற்ற குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே செம கலக்கல் குலுக்கலாய் நடனமாடி ஹாட்டாக தெறிக்க விட்டுள்ளார். இந்த ஒரே பாட்டு நடனத்திற்கு மட்டும் சுமார் 2 கோடி சம்பளம் என கூறப்படுகிறது. அத்தகைய ஹாட் பாடல் தொடர்பான அப்டேட் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா ஆடிய, ‘காவாலா’ பாடலை பூஜா ஆடிய பாடல் பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வருமா என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வகையிலும், “செம்ம ஸம்மர் ஸாங்” ஸ்டார்ட் ஆயிடுச்சு.!