
அஜித் படம் ரிலீஸான பிறகு, விக்ரம்-சூர்யா படங்கள் ஒரே தேதியில் மோதல்
அஜித் படம் ரிலீஸான 20 நாட்களுக்கு பிறகு, விக்ரம்-சூர்யா படங்கள் நேருக்கு நேர் களத்தில் இறங்குகின்றன. இது பற்றிய தகவல்கள் காண்போம்..
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2017-ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம்’ பட டீசர் வெளியானது. ஆனால், படப்பிடிப்பு முழுமையாக நடைபெற்று முடிய, நிதி நெருக்கடியால் பல போராட்டங்களை சந்தித்துவிட்டார் கௌதம் மேனன்.
பின்னர், இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கௌதம் மேனன், 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் இப்படம் திரையில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. சில காரணங்களால், ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.
‘துருவ நட்சத்திரம்’ படத்தால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளித்து இப்படத்தை எப்படியாவது திரையில் வெளியிட வேண்டும் என்ற முனைப்போடு தீவிரமாக இருந்து வருகின்றார். அவரின் இந்த முயற்சிக்கு தற்போது பலன் கிடைக்கப்போவதாக தெரிகின்றது.
அவ்வகையில் ‘துருவ நட்சத்திரம்’ படம் மே 1-ந்தேதி திரையில் வெளியாகும் என தகவல் வந்துள்ளது. அதே தேதியில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படமும் வெளியாகிறது.
இந்நிலையில், அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம், முன்னதாக ஏப்ரல் 10-ந்தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.