தனுஷ்-ராஷ்மிகா நடித்த ‘குபேரா’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பும்.. விவகாரமும்
‘குபேரா’ டைட்டில் பதிவு தொடர்பாக, ரிலீஸ் தேதியில் மாற்றம் இராது என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்..
பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ், ‘ராயன்’ படத்தை தொடர்ந்து ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதனிடையே ‘இட்லி கடை’ படத்தையும் இயக்கி நடித்தும் வருகிறார். மேலும், சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்திலும் நடித்து வருகிறார். ‘குபேரா’ படம் தனுஷின் 51-வது படமாக உருவாகிறது.
ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் ‘குபேரா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, நாகார்ஜுனா முக்கிய ககதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
A story of power..👑
A battle for wealth..💰
A game of fate..♟️#SekharKammulasKuberaa is ready to deliver an enchanting theatrical experience from 𝟐𝟎𝐭𝐡 𝐉𝐮𝐧𝐞, 𝟐𝟎𝟐𝟓. @dhanushkraja KING @iamnagarjuna @iamRashmika @sekharkammula @ThisIsDSP @SVCLLP @amigoscreation pic.twitter.com/OUATNh4iES— Sree Venkateswara Cinemas LLP (@SVCLLP) February 27, 2025
திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் ஷூட் நடைபெற்று முடிந்தது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வரவேற்பு பெற்றது.
இப்படம் வருகிற மார்ச் மாதம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், வருகிற ஜுன் மாதம் 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தனுஷ் ஃபேன்ஸ் குஷியாகி உள்ளனர்.
இதனிடையே ‘குபேரா’ டைட்டில் முன்னதாகவே பதிவு செய்திருக்கிறேன் என தெலுங்குப் பட தயாரிப்பாளர் விவகாரத்தில் இறங்கியுள்ளார். இதனால், பட ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படாது என கோலிவுட் வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.