‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா; விஜய் மூவ் என்ன?: ரசிகர்கள் ஆர்வம்..

Web Ads

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் பொங்கலை முன்னிட்டு வெளிவருவது தெரிந்ததே. 3 வருடங்களாக விஜய்யின் படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. கடைசியாக ‘வாரிசு’ திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா 2023-ம் ஆண்டு நடைபெற்றது.

அதன் பிறகு வெளியான லியோ மற்றும் GOATஆகிய படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. எனவே, 3 வருடங்கள் கழித்து இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காகவும், தன் கடைசிப் பட இசை வெளியீட்டு விழா என்பதற்காகவும் இந்த விழாவில் கலந்துகொள்ள விஜய் ஆர்வம் காட்டி வருகிறார்.

கடைசிப்பட விழாவில் விஜய் என்ன பேசப் போகின்றார்? எப்படி பேசப் போகின்றார்? அரசியல் குறித்து ஏதும் பேசுவாரா? என ரசிகர்களும் ஒருபக்கம் ஆர்வமாக இருக்கின்றனர். ஏனென்றால் விஜய் தன் அரசியல் வருகையை அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு, அவர் கலந்துகொள்ளப் போகும் முதல் சினிமா நிகழ்ச்சி இது. எனவே தான் ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக இருக்கின்றனர்.

விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொது ரசிகர்களும் இவ்விழாவை பார்க்க ஆவலாக இருக்கின்றனர். ஆனால், இந்த விழா தமிழ்நாட்டில் நடக்காமல் வெளிநாட்டில் நடப்பது தான் விஜய் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக உள்ளது.

மலேசியாவில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு பெரும்பாலான விஜய் ரசிகர்களால் செல்லமுடியாது. இதுவே, தமிழகத்தில் நடந்தால் நேரடியாக விஜய்யின் கடைசிப் பட விழாவை பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும். ஆனால், வெளிநாட்டில் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதால் அந்த வாய்ப்பு ரசிகர்களுக்கு அமையாமல் போய்விட்டது.

இருந்தாலும், டிவி.யில் இந்நிகழ்ச்சியை கண்டு மகிழலாம் என ரசிகர்கள் இருக்கின்றனர். டிசம்பர் 27-ந்தேதி இந்நிகழ்ச்சி மலேசியாவில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் ட்ரைலர் வெளியாக இருக்கின்றது.

அதன் பிறகு, ஜனநாயகனுக்கு புரோமோஷன் பணி எதற்கு? ஃபோகஸ் எதற்கு? இது போதாதா.! தெறி தெறிக்குமே தியேட்டர்கள்.!

vijay in jananayagan movie audio launch update
vijay in jananayagan movie audio launch update