அஜித் படமும் தனுஷ் படமும் ஒரே தேதியில் ரிலீஸ்: வைரலாகும் இணையதள கலாட்டா
அஜித்-தனுஷ் படங்கள் ரிலீஸ் தொடர்பாக, இணையவெளியில் ரசிகர்கள் அரங்கேற்றும் ரகளை தொடர்கிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்..
பன்முகத் திறமை கொண்ட நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
இதனிடையே தனுஷ் இயக்கி நடித்துக் கொண்டிருக்கும்’ இட்லி கடை’ திரைப்படம் ஏப்ரல் மாதம் 10-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில், தனுஷுடன் அருண் விஜய், நித்யா மேனன் நடித்துள்ளனர்
அதே நாளில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி ‘தல’ அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படமும் வெளியாக இருக்கின்றது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் ‘தல’ ரசிகர்கள் ‘குட் பேட் அக்லி’ படத்துடன் தனுஷின் ‘இட்லி கடை’ படம் வெளியானால் அவ்வளவு தான். தனுஷ் ‘இட்லி கடை’ படத்தை அதே தேதியில் ரிலீஸ் செய்யாமல் இருப்பது நல்லது என கூறி வருகின்றனர். பலர் தனுஷை கடுமையாக விமர்சிப்பதும் இணையத்தில் தொடர்கிறது.
அஜித் ரசிகர்கள் ஒரு சிலர், இட்லி பாத்திரத்திற்கு மாலை போட்டு கிண்டல் செய்தும் வருகின்றனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் அஜித் ரசிகர்கள் தனுஷை விமர்சிப்பதை பார்த்து, விஜய் ரசிகர்கள் தனுஷிற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளனர்.
இச்சூழலில், எதிர்பாராத திருப்பமாக ‘இட்லி கடை’ படத்தை ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸாகும் அன்று வெளியிடுவதாக தனுஷ் அறிவித்தால்.? விஜய் ரசிகர்களின் சப்போர்ட் தனுஷிற்கு இருக்குமா? எனவும் அஜித் ரசிகர்கள் கேள்விக் கணை விடுத்து வருகின்றனர்.