முத்து மீனாவை திட்டிய விஜயா, அண்ணாமலை கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
முத்து,மீனாவை விஜயா திட்ட அண்ணாமலை ஷாக் கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ஹாஸ்பிடல் போனோம் இந்த மீனா எங்க போனா, டிபன் செய்யல எல்லாத்தையும் விட்டுட்டு பூ கட்டறதுக்கு போயிட்டாளா இது மாதிரி அவங்க வீட்ல யாருக்குமே இப்படி இருந்தா இது மாதிரி பண்ணுவாளா அவன் எங்க போனா அவனும் பின்னாடி போயிட்டான்னா. அவதான் வெளிய இருந்து வந்தவ இவனுக்கு கூட பொறந்தவன் தானே இவங்க ரெண்டு பேருக்கும் என்ன அக்கறை இருக்கு அவன் என் பையன் என்று கத்தி கொண்டு இருக்கிறார்.
என் பையனுக்கு இப்படி ஆக காரணமே அவங்க ரெண்டு பேர்தான் என்று சொல்ல அண்ணாமலை அவங்க என்ன பண்ணாங்க என்று கேட்கிறார் அவங்க தானே காசு காசு நச்சரிசாங்க அதனால இவன் அந்த ஆள பார்த்த உடனே ஓடிப் போய் இப்படி ஆயிடுச்சு இதுக்கெல்லாம் இவங்க ரெண்டு பேர்தான் காரணம் என்று அழுத்தமாக சொல்லுகிறார். இப்ப கூட அவங்க அம்மா வீட்டுல போயி நீங்க நடந்தது சந்தோஷமா சொல்லிக்கிட்டு இருப்பா நீங்க கூட்டிட்டு வந்தவ எப்படி இருக்கான்னு பாருங்க என்று பேசிக்கொண்டே போக அண்ணாமலை பேசி முடிச்சிட்டியா என்று கேட்கிறார் இதுக்கு மேல பேச என்ன இருக்கு என்று முத்துவையும், மீனாவையும் திட்டி தீர்த்து விடுகிறார்.
உடனே அண்ணாமலை விஜயாவின் கையை பிடித்து டைனிங் டேபிளுக்கு இழுத்துச் செல்கிறார்.என்னது இது திறந்து பார் என்று சொல்ல அதில் எல்லோருக்கும் டிபன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள் விஜயா. முதல்ல பேசணும்ன்றத யோசித்து பேசு நீ பாட்டுக்கு தவளை கத்துற மாதிரி கத்திக்கிட்டு இருக்க என்று சொல்லுகிறார். ரவி முதல்ல எங்கள பேச விடுமா நீயே பேசிகிட்டு இருக்க, மீனா அண்ணி அவங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்துக்கிட்டு ஹாஸ்பிடலுக்கு போயிட்டாங்க என்று சொல்ல விஜயாவின் முகம் மாறுகிறது. உடனே அண்ணாமலை இது மட்டுமில்லாமல் மனோஜ்க்கு ஹாஸ்பிடல் செலவு முத்து தான் பண்ணி இருக்கான் என்று சொல்லுகிறார். அவங்க கரெக்டா தான் இருக்காங்க அவங்கள குறை சொல்லணும்னு சொல்லாத என்று சொல்லி சாப்பிடு ஹாஸ்பிடல் போகலாம் என்று சொல்லுகிறார். உடனே சுருதி இந்த ஒண்ணுமே தெரியாம படபட பேசுவாங்க அதுக்கு பேர் என்ன என்று சொல்ல அவசரகுடுக்கை என்று சொல்லுகிறார். தட் குடுக்கை நீங்கதான் என்று சொல்ல விஜயா கடுப்பாகிறார். நீங்க சூப்பரா அங்கிள் என்று சொல்லிவிட்டுச் செல்ல, உன் பொண்டாட்டி ஓவரா பேசுற டா கொஞ்சம் வாய அடக்க சொல்லு என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் மனோஜ்க்கு ரோகினி ஜூஸ் கொடுத்து கொண்டிருக்க முத்துவும் மீனாவும் சாப்பாடு எடுத்துக்கொண்டு வருகின்றன. சாப்பிடச் சொல்ல எனக்கு வேணாம் வேணாம் கட்டு பிரிச்சதுக்கு அப்புறம் நான் சாப்பிட்டுக்குறேன் இப்போ மனோஜ்க்கு சாப்பிட கொடுக்கிறேன். என்று சொல்ல எப்படி இருக்கு என்று முத்து மனோஜ் கேட்க அதுதான் எனக்கு கண் தெரியலையே என்று சொல்லுகிறார் எல்லாம் சரியா போயிடும் என்று சொல்லிக் கொண்டிருக்க விஜயா வந்து கோவிலில் இருந்து விபூதி எடுத்துக் கொண்டு வந்து வைக்கிறார். என்ன சொன்னாங்க என்று சொல்ல கண்கட்டு பிரிக்கிறதா சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார். பிறகு மனோஜ்க்கு சாப்பாடு கொடுத்து முடிக்க நர்ஸ் வந்து மனோஜை அழைத்து செல்கின்றனர் முத்துவும் ரவியும் மனோஜை வீல்ச்சாரில் உட்கார வைக்க வேறொரு ரூமுக்கு மாற்றிய அழைக்க செல்கின்றனர். நீங்க வெளியே இருங்க கூப்பிடுவோம் என சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் கழித்து வந்து கட்டு பிடிக்க போறாங்க ஒருத்தர் உள்ள இருக்கணும்னு ஆசைப்படற விஷயத்தை சொல்ல விஜயா நான் தான் உன் அம்மா என்னதான் கூப்பிட்டு இருப்பான் என்று சொல்ல அவர் வைஃபை கூப்பிட்டு இருக்காரு என்று சிஸ்டர் சொன்னவுடன் விஜயாவின் முகம் மாறுகிறது.பிறகு ரோகிணி உள்ளே செல்கிறார். வெளியில் விஜயா கண்கலங்க அண்ணாமலை கடவுளிடம் வேண்டிக் கண்கலங்கி நிற்க, முத்து ஆறுதல் சொல்லுகிறார்.
மனோஜ்க்கு கண் திறக்க அவருக்கு கண் தெரிகிறதா? இல்லையா? குடும்பத்தினர் என்ன செய்கின்றனர்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
