Vijay Fans Protest against Meera Mitun
Vijay Fans Protest against Meera Mitun

விஜய் சூர்யாவுக்கு ஆதரவாக மீரா மிதுனுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் வெடித்துள்ளது.

Vijay Fans Protest against Meera Mitun : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சர்ச்சைக்குரிய பிரபலமாக அறிமுகமானவர் மீரா மிதுன். தன்னைத்தானே அவர் சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள அவருக்கான அறிமுகத்தைக் கொடுத்தது.

தன்னுடைய விளம்பரத்திற்காக சமூக வளையதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படம் கவர்ச்சி ஆட்டமாடிய வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.

என்னதான் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியீட்டில் டாப் ஹீரோயின்கள் தன்னை காப்பி அடிப்பதாக விமர்சித்து வந்தாலும் மீராவை யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஆடிய ஆட்டத்துக்கு பதிலடி.. மீரா மிதுனுக்கு விஜய் ரசிகர்கள் அடித்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

இதனால் தற்போது விஜய் சூர்யா உள்ளிட்ட பெரிய நடிகர்களை விமர்சனம் செய்து வருகிறார். அவர் எதிர்பார்த்தபடியே ரசிகர்களிடையே இந்த செயல் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் மீராவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் புதுச்சேரியைச் சேர்ந்த கலாம் இயக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இவர்களின் இந்த புகாரை மீரா மிதுன் கிண்டலடித்துள்ளார்.

இதனால் கடுப்பான கலாம் இயக்கத்தினர் புதுச்சேரியில் மீராவின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.