திருவண்ணாமலை கோவிலில் விக்னேஷ் சிவன் சுவாமி தரிசனம்..!
திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன் அதனைத் தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற சில படங்களை இயக்கியுள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர்,உலக் என்று இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக வைத்து எல்ஐகே என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் இருக்கும் அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று அங்கு நடந்த கோ பூஜையில் கலந்து கொண்டுள்ளார்.இது மட்டுமில்லாமல் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மாவை தரிசனம் செய்திருக்கிறார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
