விஜய் மகன் இயக்கும் புதிய படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!
விஜய் மகன் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

vijay son sanjay new movie heroine update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இவரது மகன் ஜேசன் சஞ்சய். இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.
இயக்குனராக அறிமுகமாகும் இவர் முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் என தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஹீரோயின் குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதாவது இந்த படத்தின் நாயகியாக பரியா அப்துல்லா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vijay son sanjay new movie heroine update