இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது ட்விட்டர் பயோவில் வைக்கப்பட்டிருந்த ஏகே 62 படத்தின் பெயரை நீக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கணவருமான இவர் போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், LVP, காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார்.

இந்நிலையில் இவர் அண்மையில் தல அஜித் நடிப்பில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் ஏகே 62 திரைப்படத்தை இயக்க இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகி வைரலானது. ஆனால் சமீப காலமாக விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்கவில்லை என்ற தகவல்களும் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் பரவி வந்தது.

ஆனால் இது தொடர்பான எந்த ஒரு உறுதியான தகவலும் இதுவரை வெளிவராமல் இருந்த நிலையில் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை யார் இயக்க உள்ளார் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்து வந்தனர். ஆனால் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இதனை உறுதிப்படுத்தும் வகையில் தனது ட்விட்டர் பயோவில் அவர் இயக்கியிருந்த படங்களில் லிஸ்டில் இருந்து ஏகே 62 வை நீக்கிவிட்டு Wikki6 என மாற்றி இருக்கிறார். இதனால் விக்கி ஏகே 62 திரைப்படத்தை இயக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது. தற்போது அவரது ட்விட்டர் அக்கவுண்ட்டின் புகைப்படமும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.