அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம அப்டேட்.. விடா முயற்சி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

Web Ads

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

vidamuyarchi movie release date update
Vidaamuyarchi Good Bad Ugly Ajith Kumar stills

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்திலும் லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும் த்ரிஷா ,ஆரவ்,அர்ஜூன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில் தற்போது இது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இன்று வெளியாகும் ட்ரெய்லரில் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

vidamuyarchi movie release date update
vidamuyarchi movie release date update