பணப்பெட்டிக்கு முயற்சி செய்து வெளியேறிய போட்டியாளர்? அதுவும் யார் தெரியுமா? வைரலாகும் ஷாக் தகவல்..!

பணப்பெட்டியை எடுக்க முயற்சி செய்து போட்டியாளர் வெளியேறியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. வழக்கம்போல் பணப்பெட்டி வைக்கப்பட்டிருந்தாலும், அதில் புதிய ட்விஸ்டுகளும் டாஸ்க்களும் பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார். பணப்பெட்டி எடுத்தாலும் வீட்டுக்குள் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
அதாவது பணப்பெட்டியை வெளியில் வைத்து விட்டு ஒரு தொகையை குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட தூரத்திலிருந்து எடுத்துக்கொண்டு வந்து வீட்டுக்குள் வந்து விட வேண்டும் என்பதே டாஸ்க். ஏற்கனவே முத்துக்குமரன் 50,000 ஜெயித்திருந்த நிலையில், ரயான் 2 லட்சம் ஜெயித்திருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து ஜாக்லின் 8 லட்சம் பணப்பெட்டிகாக விளையாடும் போது இரண்டு நிமிடம் தாமதமாக வந்ததால் அவர் கேமில் இருந்து வெளியேறியதாக சொல்லப்படுகிறது. ஜாக்குலின் டைட்டில் வின்னர் ஆக வர அதிக வாய்ப்பு இருந்த நிலையில் தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது அதிகாரப்பூர்வ அறிவிப்பா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

bb jacqueline quit from biggboss tamil 8