
நடிகனாகும் ஆசை தனுஷுக்கு துளிகூட இல்லை: ‘விடாமுயற்சி’ நிகழ்ச்சியில் மகிழ் திருமேனி ஃப்ளாஷ் பேக்..
அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட புரோமோட் செய்யும் நிகழ்வில், மகிழ் திருமேனி கூறிய சுவாரஸ்ய ஃப்ளாஸ்பேக் பார்ப்போம்..
‘தல’ அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் பிப்ரவரி 6-ந்தேதி வெளியாகிறது.
இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர். தற்போது இப்படத்தை புரமோட் செய்யும் விதமாகவும் மற்றும் கடந்து வந்த திரை அனுபவம் பற்றியும் மகிழ் திருமேனி கூறியதாவது: ‘விடாமுயற்சி’ திரைப்படம் பெண்களுக்கான படம்.
இந்த படம் வரும் தேதி பண்டிகை தேதியாக மாறும் என அஜித் சார் சொன்னார். அது நடக்கும்.
முன்னதாக, நான் செல்வராகவன் மற்றும் கெளதம் மேனனின் உதவி இயக்குநர். துள்ளுவதோ இளமை மற்றும் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய அனுபவம் தான் தரமான படங்களை இயக்கும் திறமையை கொடுத்துள்ளது.
இந்த சூழலில் தனுஷை பற்றியும் சொல்ல விரும்புகிறேன். அவரது அப்பா கஸ்தூரி ராஜாவுக்குப் பிறகு செல்வராகவன் சினிமாவில் நுழைந்தார். ஆனால், தனுஷுக்கு சினிமாவில் நடிகனாக வேண்டும் என்கிற ஆசை துளிகூட இல்லை.
அவர் கேட்டரிங் எல்லாம் படித்துக் கொண்டு வேறொரு பாதையை தேர்வு செய்ய நினைத்தார். அவரை, செல்வராகவன் கட்டாயப்படுத்தித் தான் நடிகராக மாற்றினார். ஆனால், இன்று அனைவரும் ஆச்சர்யப்படும் அளவுக்கு மிகப்பெரிய நடிகராக தனுஷ் மாறியுள்ளார்’ என தனுஷின் ஃபிளாஷ்பேக் பற்றி கூறியுள்ளார்.
ஆம், இன்று கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிப்பு அசுரனாக மாறியிருக்கிறார் தனுஷ்.!
