
‘சாவா’ வரலாற்று திரைப்படத்தில் ராஷ்மிகா ஆட்டம்: வலுக்கும் எதிர்ப்பு, வைரலாகும் நிகழ்வு..
‘கமர்ஷியலுக்காக எடுக்கப்படும் திரைப்படமாவில், வரலாற்றுப் பிழை இருத்தல் கூடாது’ என ராஷ்மிகா ஆடிய நடனத்திற்கு எதிராக சர்ச்சை பரவி வருகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்..
‘சாவா’ திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய, வெளியிடுவதற்கு முன்பு வரலாற்று ஆய்வாளர்களுக்குக் காட்ட வேண்டும் என்று மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சாம்பாஜிராஜே சத்ரபதி கூறியுள்ளார்.
அதாவது, சத்ரபதி சாம்பாஜி மகாராஜா, மகாராணி யேசுபாய் வேடங்களில் நடித்த விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா இடையேயான நடனக் காட்சி மராத்திய சில குழுக்களின் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.
பட டிரெய்லரில், மகாராஷ்டிராவின் கலாச்சார பாரம்பரியத்துடன் தொடர்புடைய பாரம்பரிய இசைக்கருவியான ‘லெஜிம்’மைக் கொண்டு கௌஷலும் மந்தனாவும் நடனமாடுகிறார்கள். இந்தப் பாடல் தற்போது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை மற்றும் அவரது வீரமிக்க ஆட்சியை இந்தப் படம் எடுத்துக் காட்டுகிறது. இயக்குனர் லக்ஷ்மண் உதேக்கர் மற்றும் அவரது குழுவினர் எனக்கு டிரெய்லரைக் காட்டினர். படம் வெளியாவதற்கு முன்பு முழுப் படத்தையும் பார்க்க விரும்புகிறேன்.
வரலாற்று ரீதியான பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை வரலாற்று ஆய்வாளர்களுடன் கலந்துரையாடவும் நான் தயாராக இருக்கிறேன். உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு இந்த முக்கியமான கதையை நம்பகத்தன்மையுடன் வழங்குவதே எனது நோக்கம்’ என்று சாம்பாஜிராஜே சத்ரபதி கூறினார்.
ராஷ்மிகா, ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்த ‘அனிமல்’ படம் வரவேற்பை பெற்றது. இப்போது ‘சாவா’ படத்தில் விக்கி கௌஷலுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில், சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி மகாராஜாவாக விக்கி நடிக்க, சாம்பாஜியின் மனைவி மகாராணி யேசுபாயாக ராஷ்மிகா நடிக்கிறார்.
இந்தப் படம் குறித்து ராஷ்மிகா, ‘தென்னிந்தியாவில் இருந்து வந்து மகாராணி யேசுபாய் வேடத்தில் நடித்திருக்கிறேன். இது என் வாழ்க்கையில் நான் செய்த மிகவும் சிறப்புமிக்க கேரக்டர்.
இந்தப் படத்திற்குப் பிறகு ஓய்வு பெறலாம் என்று இயக்குனர் லக்ஷ்மனிடம் சொன்னேன். ‘சாவா’ டிரெய்லர் என்னை ஈர்த்தது. விக்கி கௌஷல் கடவுள் போல இருக்கிறார்’ என கூறியுள்ளார்.
