விஜய் சேதுபதி குறித்து குடும்பஸ்தன் பட நாயகன் மணிகண்டன் நெகிழ்ச்சி..!

Web Ads

விஜய் சேதுபதி குறித்து மணிகண்டன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

Manikandan Emotion Speech about  Vijay Sethupathi
Manikandan Emotion Speech about Vijay Sethupathi

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமானவர் மணிகண்டன். அதனைத் தொடர்ந்து குட் நைட் என்ற திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் சான்விமேகனா கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு நடுத்தர குடும்ப ஆண் மகன் படும் கஷ்டத்தை நகைச்சுவையாக கையாண்ட இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் நாயகன் ஆன மணிகண்டன் விஜய் சேதுபதி குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில் நான் முதலில் விஜய் சேதுபதி அண்ணனை காதலும் கடந்து போகும் என்ற படப்பிடிப்பில் தான் சந்தித்தேன். என்னைப்பற்றி அவரிடம் கூறிய போது எங்களுக்குள் ஒரு நட்பு ஏற்பட்டது அந்த நேரத்தில் எனது தங்கைக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தபோது விஜய் சேதுபதி அண்ணன் நேரில் வந்து பார்த்தார்.

அதுமட்டுமில்லாமல் என் தங்கை கல்யாணத்திற்கு அவரை முறைப்படி அழைக்காத போதிலும் தங்கை திருமணம் என தெரிந்து 20 நிமிடம் மண்டபத்தில் இருக்க சொல்லிவிட்டு பெண் 20 நிமிடங்களில் மண்டபத்தை வந்து சேர்ந்தார் என்னுடைய அப்பா அம்மாவிற்கு ஆறுதல் சொல்லிவிட்டு பையன் நல்லா வருவா என்று சொல்லி மூன்று லட்ச ரூபாய் கொடுத்தார் அந்த பணம் கொடுக்காமல் இருந்திருந்தால் நான் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பேன் இன்று விஜய் சேதுபதி குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Manikandan Emotion Speech about  Vijay Sethupathi
Manikandan Emotion Speech about Vijay Sethupathi