
தளபதி விஜய் உருவத்தை டாட்டூ குத்தி விளையாடி, ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்..
விஜய்யின் பன்ச் டயலாக் பேசி அசத்தலான வெற்றி பெற்றிருக்கும் தமிழ் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வருண் குறித்த வைரல் நிகழ்வை பார்ப்போம்..
இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தியின் அசாத்திய பந்துவீச்சுக்கு, இந்திய வீரர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
இந்நிலையில், வருண் மற்றொரு செயலுக்காக இணையத்தில் டிரெண்ட்டாகி வருகிறார். அதாவது, வருண் சக்கரவர்த்தி தனது உடலில் தவெக தலைவரும், நடிகருமான தளபதி விஜய்யின் உருவத்தை டாட்டூ குத்தியுள்ளது வைரலாக பரவி வருகிறது.
விஜய்யின் ‘தலைவா’ படத்தின் ஸ்டில்லை தனது உடலில் பச்சைக் குத்தியுள்ளார். ஸ்பின் பந்தில் கலக்கி வரும் வருண் சக்கரவர்த்தி, நடிகர் விஜயிய்ன் தீவிர ரசிகர் ஆவார். விஜய்யை ரோல் மாடலாக கருதும் அவர், ஒவ்வொரு பேட்டியிலும் விஜய் குறித்தும், அவரது பன்ச் டயலாக் குறித்தும் பேசுவதை வருண் சக்கரவர்த்தி வாடிக்கையாக வைத்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு தனது ஆதர்ச நாயகன் விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு வருண் சக்கரவர்த்திக்கு கிடைத்தது. விஜய்யுடன் தான் சந்தித்த புகைபடங்களை அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். அண்மையில் இங்கிலாந்து டி20 தொடர் தொடங்குவதற்கு முன்பு கூட ஒரு பேட்டியில் விஜய்யின் பன்ச் டயலாக்கை வருண் சக்கரவர்த்தி பேசியிருந்தார்.
தற்போது, இங்கிலாந்து தொடரிலும் வருண் சக்கரவர்த்தி அசத்தி வரும் நிலையில், அவர் பயிற்சி மேற்கொண்டபோது கையில் விஜய்யின் உருவத்தை பச்சைக்குத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
ஆம் வருண், நீ நதி போல ஓடிக்கொண்டிரு, எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்கும்.!’
