
‘புஷ்பா-3’ பட கிளாமர் பாட்டுக்கு, ஜான்வி கபூர்-சாய் பல்லவி போட்டி போட்டு குத்தாட்டம்?
(1) ஊ சொல்றியா, (2) ஃபீலிங்ஸ், இதனைத் தொடர்ந்து ‘புஷ்பா-3’ திரைப்படத்தில் அனலாக இடம்பெறும் நடனம் குறித்த தகவல் பார்ப்போம்..
இந்திய சினிமாவில், ‘புஷ்பா’ திரைப்படம் ‘கலெக்ஷன் கிங்’ எனும் அளவிற்கு சாதனை புரிந்திருக்கிறது. இப்படத்தில் இடம் பெற்ற ‘ ஊ சொல்றியா’ பாட்டுக்கு சமந்தா போட்ட ஆட்டம் செமையாய் தெறிக்கவிட்டது.
இதனைத் தொடர்ந்து 2-ம் பாகத்தில் ராஷ்மிகா மந்தனா ‘ஃபீலிங்ஸ்’ பாடலில் இதுவரை அவர் தெலுங்கு சினிமாவில் கையில் எடுக்காத அளவுக்கு செம கிளாமராக நடனம் ஆடினார். படத்தில், ஸ்ரீ லீலாவை விடவும் கூடுதலாகவே கிளாமரை அள்ளித் தெளித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது ‘புஷ்பா-3’ படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றது. இப்படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் பாட்டு மற்றும் நடனம் குறித்து தெரிவிக்கையில்,
‘புஷ்பா-3′ படத்தில் கிளாமர் டேன்ஸை ஜான்வி கபூர் ஆடினால், அதுக்கும் மேல..செம சூப்பராக இருக்கும். எனக்கு சாய் பல்லவியின் நடனமும் மிகவும் பிடிக்கும். இந்த இரண்டு பேரில் ஒருவர் கிளாமர் நடனத்திற்கு கமிட் ஆகலாம். அந்த நடனத்திற்கு இசை அமைக்க மிகவும் ஆவலாய் இருக்கின்றேன்’ என விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்கு, இணையவாசிகள், ‘இயக்குனர் சுகுமாரும் தயாரிப்பு தரப்பும் இணைந்து முடிவெடுத்து, ஜான்வி-சாய் பல்லவி இருவருமே இணைந்து போட்டி போட்டு ஆடுகிற கிளாமர் பாடலாக எடுத்து தெறிக்க விடுங்கள்’ என்பது வைரலாகி வருகின்றது.
