Web Ads

இயக்குனர் வெற்றிமாறன் பதிலால், தனுஷின் ரசிகர்கள் ஃபீல்

வடசென்னை-2 படம் தொடங்குவது எப்போது? என்பது குறித்த தகவல் பார்ப்போம்..

வெற்றிமாறன்- தனுஷ் காம்பேக்கில் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் ஆகிய படங்கள் வரவேற்பை பெற்றது.

இதற்கிடையே உருவான ‘வட சென்னை’ படமும் ரசிகர்களை கவர்ந்தது. இதன் பிறகு, இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியான காரணத்தால், வட சென்னை-2 படத்தில் இணைவது குறித்த தகவல் வெளியாகவில்லை.

தனுஷ், நடிப்பிலும் இயக்கப் பணியிலும் தொடர்ந்து பிஸியாக இருக்கிறார். 2 வருடங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை. அதேபோல வெற்றிமாறனும், ‘வாடிவாசல்’ உள்பட மேலும் ஒரு படத்தின் பணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வெற்றிமாறனிடம் ரசிகர்கள் ‘வட சென்னை-2 எப்போது? என கேட்டனர். அதற்கு அவர், ‘வரும் சீக்கிரமாவே வரும். வட சென்னை-2 ஆரம்பித்தால் கூட இவ்வளவு எதிர்பார்ப்பு உங்களுக்கு இருக்காது என்று நினைக்கிறேன். இந்த உற்சாகம் அதன் பிறகு குறைந்து விடும் என்று நினைக்கிறேன். சீக்கிரம் வரும்’ என சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.

வெற்றிமாறன் தான் கலந்து கொள்ளும் பட விழாக்களில், வட சென்னை-2 அப்டேட் குறித்து கேட்கும் போதெல்லாம் ‘விரைவில் வரும்’ என்று மட்டும் கூறுகிறார்.

அவர், ஏதேனும் ஒரு வருடத்தை அல்லது மாதத்தை குறிப்பிட்டு சொல்லவேண்டும்’ என தனுஷின் தீவிர ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.