Web Ads

விஜய் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட பாபி தியோல்..!

விஜய் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் பாபி தியோல்.

bobby deol about thalapathy vijay
bobby deol about thalapathy vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல் பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இது விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்தப் படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் தற்போது ஜனநாயகன்படத்தின் வில்லனான பாபி தியோல், தளபதி குறித்து பேசி உள்ளார் அதாவது விஜய் ஸ்வீட் ஹார்ட் ஆக இருக்கிறார்.அவர் மிகவும் எளிமையாகவும் தன்னடக்கம் கொண்ட மனிதர் என்றும் தெரிவித்து உள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

bobby deol about thalapathy vijay
bobby deol about thalapathy vijay